தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு.. மீறினால் கடும் நடடிக்கை!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுவதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சொகுசு ஹோட்டல்கள், தனியார் பார்கள், டாஸ்மாக் கடைகள் என்று நாளை தடையை மீறி மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

முன்னதாக, சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைப்பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் நாளை மறுதினம் வரை மதுபான விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web