இருசக்கர வாகனத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

 
புஸ்ஸி ஆனந்த்


 
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தொண்டர்கள் அதிகாலை முதலே படையெடுத்து மாநாட்டு மேடைக்கு முன்பாக குவிந்துள்ளனர். விடியற்காலையில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு இடத்தில் திரண்டதாகவும், வெளியூர்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஆரவாரத்துடன் இடம் பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

புஸ்ஸி ஆனந்த்
மாநாட்டுக்கு  ஒன்றரை லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் தலைவர் விஜய்யை அருகில் பார்க்கும் உற்சாகத்தில் காலையிலேயே களத்தை நிரப்பியுள்ளனர்.  தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

புஸ்ஸி


பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சியின் தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின் படி, எளிய தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பை வெளிப்படுத்தி வருவதாகவும், மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?