காவல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தார் டிடிஎப் வாசன்!

 
யூ -ட்யூபர் டிடிஎஃப் வாசன்

கடந்த மாதம் 15ம் தேதி டிடிஎப் வாசன் தனது நண்பர்களுடன்  ஓட்டுநர் உரிமத்துடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றார். மதுரை வண்டியூர் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

டிடிஎப் வாசன்

இதையடுத்து, சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மதுரை அண்ணாநகர் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட (6வது நீதித்துறை நீதிமன்றம்) மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் 10 நாள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது.

டிடிஎப் வாசன்

டிடிஎஃப் வாசனின் செல்போனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் 3 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு போலீஸார் நேரில் நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து கடந்த 3ம் தேதி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். வாசன் செல்போனை ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில் டிடிஎப் வாசன் இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தனது செல்போன் மற்றும் பிற  ஆவணங்களை ஒப்படைத்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web