தெருநாயை அடித்து கொன்ற டீக்கடைக்காரர்... பகீர் !

 
தெருநாய்

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வரும் மோகன் (56) மீது தெருநாயை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நோக்கி அங்குள்ள தெருநாய் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மோகன் அந்த நாயை கட்டையால் தாக்கி கொன்றுள்ளார்.

நாய் நாய்கள் தெருநாய்

அதைத்தொடர்ந்து, நாயின் உடலை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் எறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரின் புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்து நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!