கடிக்க வந்த தெருநாயை அடித்து கொலை செய்த டீக்கடைக்காரர் !
நாடு முழுவதும் தெரு நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மனிதர்களை கடிப்பதால் காயம் முதல் உயிரிழப்பு வரை ஏற்படுவதால், மாநில அரசுகளும், உள்ளாட்சி நிர்வாகங்களும் ரேபீஸ் தடுப்பூசி, நாய் பிடிப்பு, காப்பக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உச்சநீதிமன்றம் கூட தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பஜன்லால் தெருவில் டீக்கடை நடத்தும் மோகன் என்பவரிடம், இரண்டு நாள் முன்பு ஒரு முதியவர் டீக்கடைக்கு வந்தபோது, அப்பகுதியைச் சுற்றித் திரிந்த தெருநாய் ஒருவர் மீது பாய்ந்துள்ளது. பயந்த முதியவர் டீக்கடைக்குள் ஒளிந்ததும், நாய் தொடர்ந்தும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன், கடையில் இருந்த கட்டையை எடுத்துச் சுட்டெரித்துக் கொண்டிருந்த நாயை விரட்ட முயன்றார். ஆனால் நாய் அவரையும் கடிக்க பாய்ந்ததால், அவர் கட்டையால் பலமுறை அடித்து நாயை கொலை செய்தார். அதன் உடலை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி வீசினார்.

இந்த சம்பவம் அப்பகுதி ஒருவரால் மொபைலில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் மோகனின் நடவடிக்கை மீது கடும் எதிர்ப்பு எழுந்தது. தெருநாய்களை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி மீதும் இணையவாசிகள் வெகுவாக சாடினர். இதைத் தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர். வீடியோ அடிப்படையில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
