பள்ளி மாணவர்களின் கண், காதுகளில் மிளகாய் பொடி தூவிய ஆசிரியர்!

 
சங்கர்
வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்டதாக கூறி, 2ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் ஆசிரியர் ஒருவர் மிளகாய்ப் பொடியைத் தூவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் குதவன்பூர் கிராமத்தில் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மிளகாய் பொடி

இந்த பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த மாணவர்களில் சிலர் ஒழுங்கீனத்துடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் சங்கர், அந்த மாணவர்களின் கண்களிலும், காதுகளிலும் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.

கதறியழுத மாணவர்கள் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி முறையிட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர், சங்கரிடம் வந்து நியாயம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களையும் ஆசிரியர் சங்கர் திட்டி அனுப்பியிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

மிளகாய் பொடி

அந்த புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியர் சங்கர் தலைமறைவானார். போலீசார்  பள்ளியில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்து விட்டு, ஆசிரியர் சங்கரைத் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?