ஆசிரியர்கள் உடைக் கட்டுப்பாடு... இனி ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை!

 
ஆசிரியை பள்ளி லெக்கின்ஸ்

மாதா.. பிதா... குரு.. தெய்வம்.. என்கிறோம். குருவுக்கு அடுத்து தான் தெய்வ வழிபாடு. இவர்கள் நால்வருமே போற்றுதலுக்கு உரியவர்கள். இவர்கள் நான்கு பேரும் ஒருவரின் வாழ்வில் சரியானவர்களாக அமைந்து விட்டால் அதை விட அதிர்ஷ்டம் வேறு கிடையாது. ஒரு மனிதனை மேன்மையுற செய்வதில் இவர்களின் பங்கு பெரிது. இன்றைய காலச்சூழலில், பெரும்பாலான பள்ளிகளில், சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும்... சில என்பதைக் கொஞ்சம் அழுத்தி படித்துக் கொள்ளுங்க.. சிலர் வக்கிர புத்தியுடனே திரிகிறார்கள். மகள் வயதுடைய, வழிகாட்ட வேண்டிய மாணவியிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, மகன் வயதுடைய மாணவனை பாலியல் இன்பத்துக்கு அடிமையாக்கி, அவனது வாழ்க்கையை நாசமாக்குவது என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின்றன. இது ஏதோ தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,  அசாம் மாநில பள்ளிக் கல்வித்துறை, மாணவ  மாணவியருக்கு உடைக் கட்டுப்பாடுகள் இருப்பது போல் ஆசிரியர்களுக்கு உடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் இனி ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வகுப்பு ஆசிரியை பள்ளி லெக்கின்ஸ்

இந்த மாதிரியான ஆடைகளை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என விளக்கம் அளித்து உள்ளது. அந்த அறிக்கையில், கல்வி நிலையங்களில் பணிபுரியும் சில ஆசிரியர், ஆசிரியைகள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிந்து வருகின்றனர்.  மாணவர்கள், பெற்றோர்கள்  ஏற்று கொள்ள கூடிய ஒன்றாக அந்த உடைகள் இருப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டுக்களும், புகார்களும் எழுந்து வருகின்றன.  

ஆசிரியர்கள் பணியின் போது, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேணடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது ஆடை கட்டுப்பாடானது, நல்லொழுக்கம், நாகரீகம், தொழில் சார்ந்த விதம் மற்றும் பணியிடத்திற்கு ஏற்ற தீவிர நோக்கங்களை பிரதிபலிக்க வேண்டும். இவைகளை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிலையங்களை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளும் பின்வரும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.  இதன்படி, ஆசிரியர், ஆசிரியைகள் என்ன வகையான ஆடைகளை அணியலாம். எவற்றை அணிய கூடாது என அறிவித்து உள்ளது.

ஆசிரியை பள்ளி லெக்கின்ஸ்

ஆசிரியர்கள் பேண்ட், சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். (டி-சர்ட், ஜீன்ஸ்  உடுத்தக் கூடாது). அதே போல் ஆசிரியைகள் சல்வார், புடவைகளை அணிந்து பள்ளிக்கு வரலாம்.டி-சர்ட், ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் ஆகியவற்றை உடுத்தக் கூடாது.  ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் என இருவரும் தூய்மையான, உடலை அதிகம் மூடும்படியான மற்றும் கண்ணியமிக்க ஆடைகளை, பளிச்சென்று தெரியாத வண்ணத்தில் அணிவது உத்தமமான செயல்.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடிய ஆடைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த கட்டுப்பாடுகளை ஆசிரிய ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web