ஆசிரியர்கள் அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்... தவெக தலைவர் விஜய்!

 
தவெக விஜய்


 இன்று இந்தியா முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்  தவெக தலைவர் விஜய், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


 இது குறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள், அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள். அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்.
இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர்  கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள். ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்
ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?