அஜித் பட நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்... ட்ரோல் செய்த ரசிகர்கள்!

 
அனிகா

நடிகர் அஜித் நடித்து வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்தரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ட்ரோல் செய்து கிண்டல் செய்து வருகின்றனர். 

சினிமாவில் எதை எப்போது செய்வார்கள் என்று கூற முடியாது. படத்தில் பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். படத்தோட பப்ளிசிட்டிக்காக இவ்வளவு கேவலமாக செய்யறதை நிறுத்தி விட்டு, இதற்காக மெனக்கெட்ட நேரத்துல படத்தோட கதையில கவனத்தை செலுத்துங்கடா... படம் ஒரு நாலு நாளைக்காவது ஓடும் என்று ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா, அதன் பிறகு விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்ததால், ரசிகர்கள் அனிகாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய நிலையில், அரை குறை ஆடைகளில் எடுத்த போட்டோஷூட்களை கசிய விட்டு, வைரலாக்கிய நிலையில், புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்தார் கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

Anikha

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பிப்ரவர் 24ம் தேதி வெளியானது. ஹீரோயினாக நடித்த இரண்டாவது படத்திலேயே முத்தக் காட்சியில் தயக்கமே இல்லாமல் நடித்திருந்தார். இது சர்ச்சை ஆனதால், ஓ மை டார்லிங் ஒரு காதல் படம் என்பதால், முத்தக்காட்சி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும் போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார் என விளக்கம் கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிகா உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து இளம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ஒரு சாயலில் இவர் நயன்தாரா போல இருப்பதால், நயன்தாராவின் விஸ்வாசிகள் அவரை குட்டி நயன்தாரா என அழைத்து வருகின்றனர்.

Anikha

இந்நிலையில், அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது. அந்த போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், செல்வி நந்தினி 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று போடப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள், நடிகை அனிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர். படத்தோட பப்ளிசிட்டிக்காக செலவிடுகிற நேரத்துல படத்தோட கதையில கவனம் செலுத்துங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web