பேருந்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. இளைஞர் பொளந்து கட்டிய உறவினர்கள்!

 
மங்களூரு இளைஞர்

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள நாகுரியில் உள்ள எஸ்கே குழும நிறுவனத்தின் பொருட்களை இளம் பெண் ஒருவர் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று நாகுரியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று பொருட்களை எடுத்து வந்து விற்பனைக்கு கொண்டு சென்றார். பொருட்களை விற்பதற்காக ஸ்டேட் வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார் இளம்பெண்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

அங்கிருந்து பாஜ்பே செல்வதற்காக இளம்பெண் பேருந்தில் ஏறினார். கண்டக்டர் பக்கத்தில் நான்காவது இருக்கையில் இளம்பெண் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு இளைஞன் அவளைப் பின்தொடர்ந்து சென்று அந்த இளம்பெண்ணின் இருக்கைக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணின் இடுப்பை பிடித்து அநாகரீகமாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிறுமியின் உறவினர்கள் பேருந்தை பல்லால் பாக் பகுதியில் நிறுத்தினர். பின்னர், இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை பேருந்தில் இருந்து தூக்கி எறிந்து அடித்து உதைத்துள்ளனர்.

இதனால் அவர் அலறினார். இதையடுத்து, அந்த இளைஞர் பந்தேஷ்வர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web