இளம்பெண்ணைக் கொன்று உடலை வீசிய கொடூரம்... நண்பன் வெறிச்செயல்!

 
பூஜா
நண்பனாக பழகி வந்தவனே, இளம்பெண் பூஜாவை பணப்பிரச்சனையில் கொலைச் செய்து, உடலை காட்டுக்குள் வீசி சென்ற கொடூரம் கர்நாடகா மாநிலத்தை அதிர செய்துள்ளது. தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதியாக இருந்து வந்தவர் பூஜா. கலகலப்பாக பேசி, அனைவரிடமும் அன்பாக பழகி வந்த பூஜாவிடம் மணிகண்டன்  என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், பூஜா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,காட்டில் இளம்பெண் பூஜாவின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். 

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள அகும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் குஷால். இவரது மகன் பூஜா(24). இவர் தர்மஸ்தலா சங்கத்தின் சேவை பிரதிநியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி வேலைக்குச் சென்ற பூஜா திடீரென காணாமல் போனார். அவர் வீடு திரும்பாததால், பூஜாவின் தந்தை குஷால், அகும்பே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பூஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அகும்பே வனப்பகுதியில் பூஜாவின் உடல் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பூஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மும்பை போலீஸ்

இதையடுத்து பூஜாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நாலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸார், மணிகண்டனை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பூஜாவும், அவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், பணப்பிரச்சினையில் பூஜாவை மணிகண்டன் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web