கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் கொலை... 2 சிறுவர்கள் கைது!
தூத்துக்குடியில் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிரேஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரி (37). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர். ராமசுப்பு மும்பையில் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதால் சக்தி மகேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே சக்தி மகேஸ்வரி உறவினரான தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரன் தனது மனைவி மகன், மகள் ஆகியோரை விட்டு விட்டு உமா மகேஸ்வரி வீட்டிலே இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜேந்திரன் மகனான இளஞ்சிறார் தனது தந்தையை பலமுறை கண்டித்து உள்ளார். ஆனால் அவர் கேட்காததால் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று அவளை என்னுடைய தந்தையுடன் தொடர்பு வைத்து இருந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். ஆனாலும் சக்தி மகேஸ்வரி தொடர்ந்து ராஜேந்திரனுடன் தொடர்பில் இருந்தாராம்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜேந்திரன் தனது வீட்டுக்கு செல்லாமல் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று விட்டாராம். இதையறிந்த அவரது மகன் மற்றும் அவரது நண்பனான இன்னொரு இளம் சிறார் இரண்டு பேரும் சேர்ந்து சக்தி மகேஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் இரண்டு பேரும் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாளமுத்து நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்தி மகேஸ்வரி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அருளுப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
