திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்.. திமுக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு!

 
5வது திருமணம்


தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் திமுக நகர செயலாளராக உள்ளார். மேலும், அப்பகுதியில், கடையும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார். இவரது கடையில், நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 34 வயதான விதவைப் பெண் மகாலட்சுமி என்பவர் வேலைப் பார்த்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கணவர் இறந்த நிலையில், குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் வசித்து வந்த மகாலட்சுமியிடம் கண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கி பழகி உள்ளார்.

தூத்துக்குடி

திருமணம் செய்து கொள்வதாக கூறிய கண்ணன் மகாலட்சுமியுடன் பல முறை உறவு வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென பின்வாங்கிய அவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மகாலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்துள்ளனர். மேலும், 3 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல் சென்று விட வேண்டும் என மகாலட்சுமியை கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அவர் நேரில் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web