இளம்பெண் குளிப்பதை மறைந்து நின்று வீடியோ எடுத்த கொடூரம்.. பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு!

 
வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி மிஷன் வளாகத்தைச் சேர்ந்தவர் விமலன் (45). தோவாளை கிழக்கு ஒன்றிய பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியால செயல்பட்டு வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அப்போது வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, இளம்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் விமலன் ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் விமலன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் சென்னை அல்லது கேரளா சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குளிப்பதை பாஜக் நிர்வாகி வீடியோ சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web