மெட்ரோ ரயிலில் இளம்பெண்கள் குடுமிப்பிடி சண்டை.. வைரல் வீடியோ!
மெட்ரோ ரயிலில் வழக்கமாக தான் அமரும் இடத்தில் வேறொரு பெண் அமர்ந்திருப்பதாக கூறி, சீட் பிடிப்பதில் இரு இளம்பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகராறாக முற்றி இரண்டு பெண்களும் ஓடும் ரயிலில் அனைத்து பயணிகளின் முன்பாகவும் குடுமிப்பிடி சண்டை போட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kalesh between two ladies inside kaleshi Delhi Metro over seat issues pic.twitter.com/tny8m7TSIx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 23, 2025
டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த இந்த சம்பவம் பயணிகளை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ட்விட்டரில் வெளியான அந்த வீடியோவில், பேண்ட் சட்டை அணிந்த 2 பெண்கள், ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்தபடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரை மெட்ரோ ரயில் இருக்கையில் தள்ளிவிட்டு அவரை அங்கிருந்து எழுந்திருக்க விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டே அவருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார். கீழே இருக்கும் பெண்மணியும் பதிலுக்கு இன்னொரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்.

இவர்கள் இருவரும் இப்படி முடியைப் பிடித்திழுத்து சண்டைப் போட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு பெண் வந்து சண்டையை விலக்கிவிட முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
ரயில் கம்பார்ட்மெண்டில் நிறைய இருக்கைகள் காலியாக இருக்கும் போது, குறிப்பிட்ட இந்த இடத்தில் அமர்வதற்காக அவர்கள் எதற்காக சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இந்த குடுமிப்பிடி சண்டைக் காட்சி வலைத்தளத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
