எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி... மருத்துவமனையை மூட உத்தரவு!

 
ஹேமச்சந்திரன்

 புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரில் வசித்து வருபவர்  செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன் , ஹேமராஜன் என  இரட்டை ஆண் பிள்ளைகள். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணிக்கு சேர்ந்தார்.  26 வயதான ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு  24ம் தேதி   ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஹேமச்சந்திரன்

கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.  சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் திடீரென ஹேமச்சந்திரன் உயிரிழந்தார்.   ஹேமச்சந்திரன் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹேமச்சந்திரன் குடும்பத்தினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சென்னை பம்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.   உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

ஆம்புலன்ஸ்


புதுச்சேரியில் வசித்து வரும் 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் இது குறித்து  ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web