கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை... காதலியின் கணவர் கைது!!

 
பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி  மாவட்டத்தில் வல்லநாட்டில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யபட்ட வழக்கில் காதலியின் கணவர் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் ஈனமுத்து மகன் முருகேஷ் (29), இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே இந்த தம்பதியர் தூத்துக்குடியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கைது
 
இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் முருகேஷ் தனது மனைவி குழந்தைகளைப் பிரிந்து வல்லநாட்டில் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது வல்லநாடு வண்டி மலையாச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் கொம்பையா (40) என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை நேரில் பார்த்த கொம்பையா முருகேசன் இனிமேல் எனது மனைவியை பார்க்கக்கூடாது எனது மனைவியுடன் பேசக்கூடாது என்று கண்டித்து உள்ளார். இதனால் இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் வல்லநாடு அருகில் உள்ள பாறைக்காடு கிராமத்தில் உள்ள மதுபான கடையில் முருகேஷ் மதுபானம் வாங்கிக் கொண்டிருந்தாராம்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அப்போது அங்கு வந்த கொம்பையா, முருகேசை சரமாரியாக அரிளால் வெட்டினாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேஷ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கொம்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுகிர் பார்வையிட்டார். இந்த சம்பவம் வல்லநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?