அடுத்த 12 மணி நேரத்தில் தேஜ் புயல்... 7 நாட்களுக்கு அலெர்ட்!!

 
புயல்

அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.   காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

இடி மின்னல் மழை

தேஜ்  அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப்புயலாகவும், 24 மணி நேரத்தில் மிக தீவிரப்புயலாகவும் வலுப்பெறக்கூடும் . 25ம் தேதி அதிகாலை ஓமன் - ஏமன் இடையே புயல் கரையை கடக்கும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கன மழை
இந்நிலையில்  வடகிழக்கு பருவமழை நாளைய தினம் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகம்  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web