தமிழ்நாட்டின் மருமகனாகிறார் தேஜஸ்வி சூர்யா... பிரபல பாடகியுடன் திருமணம்!
கர்நாடக மாநில பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கும் சென்னையைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞரும், கர்நாடக இசைப் பாடகியுமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான கர்நாடகா மாநிலம் தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த பிரபல பாடகரும், பரதநாட்டிய நடனக் கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்திற்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேஜஸ்வி சூர்யா – சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமணம் வரும் மார்ச் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. கர்நாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், முறைப்படி பரதநாட்டிய கலையையும் பயின்றவர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உயிர் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ, சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்ஏ பட்டமும், சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்ஏ பட்டமும் பெற்றுள்ளார்.பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தில் பாடலையும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!