தெலங்கானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி!
தெலுங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்த பாஜக கூட்டணிக்கு, தெலுங்கானாவில் ஏற்பட்ட இந்த தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி டெபாசிட்டையே இழந்தது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மரணத்தைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் காங்கிரஸ் கட்சி நவீன் யாதவை வேட்பாளராகவும், எதிர்க்கட்சியான பிஆர்எஸ் மறைந்த கோபிநாத்தின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராகவும் நிறுத்தியது. மொத்தம் 58 பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில், நவம்பர் 11 அன்று 48.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 1,94,632 வாக்குகள் பதிவான நிலையில் இன்று காலை யூசுப்குடாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை 10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 70,341 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். பிஆர்எஸ் வேட்பாளர் சுனிதா 50,544 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் தீபக் ரெட்டி 11,923 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் மட்டுமே நிற்க, டெபாசிட் இழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ வெற்றி பெற்ற இந்த தொகுதியை காங்கிரஸ் இப்போது கைப்பற்றியுள்ளதால், மாநில அரசுக்கு இது முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
