தமிழகத்தி 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு!
நேற்று தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் போல வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். நேற்று மட்டும் வெயில் 15 இங்களில் சதம் அடித்துள்ளது.

மதுரை விமான நிலையம் - 106.7 டிகிரி பதிவு
மதுரை நகரம் - 104.72
கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் - 102.2
திருச்சி - 102.02
வேலூர் - 101.84
ஈரோடு - 101.12
அதிராம்பட்டினம், நுங்கம்பாக்கம் - 100.76

மீனம்பாக்கம் - 100.58
புதுச்சேரி, தஞ்சாவூர் - 100.4
காரைக்கால், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை - 100.04 வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
