கோவில் கொடை விழா... மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்!

 
எல்கை மாட்டுவண்டி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

எல்கை பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் என பல மாவட்டங்களில் இருந்து  சின்னமாடு பூஞ்சிட்டு என 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 

மாட்டு வண்டி எல்கை

பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தினை புதூர் எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் வெற்றி வேலன் தொடங்கி வைத்தார். சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ஓட்டப்பிடாரம் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு மேட்டூர், சக்கம்மாள்புரம் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு சிங்கிலிபட்டி, தெற்கு தீத்தாம்பட்டி மாட்டு வண்டியும் பெற்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?