நடுரோட்டில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை... சிறுவர்கள் வெறிச்செயல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த கோவில் பூசாரியை வழிமறித்து 2 சிறுவர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 17 வயதுடைய ஒரு சிறுவனைக் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் விஜயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு ரவி கோவிலில் பூஜை முடித்துவிட்டு 10 மணியளவில் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சேதுபாதைரோடு பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது 2 பேர் அவரை வழிமறித்து சரமரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏஎஸ்பி மதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுெதாடர்பாக தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏஎஸ்பி மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இளஞ்சிறார் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அந்த முன் விரோதத்தினால் இளஞ்சிறார் மற்றொரு நபருடன் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து வாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து சிறுவனைக் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
