கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்!

 
உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்ற நிலையில், மழையிலிருந்து தப்பிக்க மக்கள் மேற்கூரையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் நால்வர் காயமடைந்தனர்.

உயிரிழப்பு

காயமடைந்தவர்களின் இருவர் சத்தர்பூரில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சௌரி சிக்கந்தர்பூரில் வசிக்கும் ராஜேஷ் கௌஷலின் மாமனார் ஷியாம்லால் கௌஷல்(50)

பள்ளி மானவி தற்கொலை

நேற்றிரவு அவரது குடும்பத்தினர் பாகேஸ்வர் கோயிலுக்கு காரில் வந்திருந்தார். கோயிலின் மடாதிபதி திரேந்திர சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசி பெற வந்ததாகக் கூறினார். காலை 7.30 மணிக்கு குடும்பத்தினர் கோயில் வந்திருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?