ஆந்திராவில் பெரும் பதற்றம்.. முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலை எரிப்பு!

 
ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி

ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக இருந்தார். பின்னர் ஆந்திர மாநிலம் முழுவதும் தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சிலைகளை நிறுவினார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 

ஆந்திராவில் அரியணை யாருக்கு? தபால் வாக்குகளில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை!

தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதில் இருந்து, ஓ.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினருக்கும் அவர்களுக்கும் தொடர் மோதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் பாப்பரட்டலா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவபொம்மையை மர்ம நபர்கள் பெட்ரோல்  ஊற்றி தீவைத்தனர்.

சிலை முழுவதும் எரிக்கப்பட்டது. இதை பார்த்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.  உருவபொம்மையை எரித்ததாக தெலுங்கு தேசம் கட்சி மீது குற்றம் சாட்டினர். இதை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி, அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web