டெல்லியில் பதற்றம்... மேலும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... கடந்த 3 நாட்களில் 10 பள்ளிகளுக்கு மிரட்டல்!
இன்று காலை டெல்லியில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல்கள் வந்துள்ளது பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, பின்வரும் பள்ளிகள் மிரட்டல் மின்னஞ்சல்களைப் பெற்றதாகப் புகாரளித்துள்ளன.

செயிண்ட் தாமஸ், துவாரகா
மதர் இன்டர்நேஷனல் பள்ளி, ஹவுஸ் காஸ்
ரிச்மண்ட் பள்ளி, பாஸ்சிம் விஹார்
வசந்த் குஞ்சில் ஒரு பள்ளி
லக்ஷ்மன் பப்ளிக் பள்ளி, ஹவுஸ் காஸ்
சர்தார் படேல் பள்ளி, புது தில்லி
நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட துவாரகாவில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளிக்கு இன்று இரண்டாவது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் நேற்று இதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவது தொடர்ந்து இன்று 3வது நாளாக வந்துள்ளது. ரோகிணி செக்டார் 14ல் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளி, சாணக்யபுரியில் உள்ள கடற்படை பள்ளி மற்றும் துவாரகா செக்டார் 16ல் உள்ள மற்றொரு CRPF பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.டெல்லி முழுவதும் 10 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
