தலைநகரில் பரபரப்பு... செல்போன் டவர், மரங்கள் மீது ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம்!

 
தமிழக விவசாயிகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர் மற்றும் மரத்தின் மீது ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விவசாய விளைபொருட்களின் விலையை மத்திய அரசு இரட்டிப்பாக்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 30-ம் தேதி வரை ஒரு வார காலம் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை திடீரென பெண்கள் உட்பட விவசாயிகள் சிலர் செல்போன் டவர் மற்றும் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் உடனடியாக செல்போன் டவர் மற்றும் மரத்தின் மீது ஏறி விவசாயிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.  மேலும், தமிழக விவசாயிகள் பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருவதால், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web