மாலத்தீவு அரசியலில் பெரும் பதற்றம்.. அதிபருக்கு பில்லி சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது!

 
மாலத்தீவு அமைச்சர்

அண்டை நாடான மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் சலீம். அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஜனாதிபதி மாளிகையில் அமைச்சருக்கு இணையான பதவியை வகித்து வருகிறார். இந்நிலையில்  அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் சலீம்  ஜனாதிபதி முகமது மொய்சேவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.

 அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பாத்திமா ஷம்னாஸ், ஆதம் ரமீஸ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.இதனிடையே பாத்திமா ஷம்னாஸ் மற்றும் ஆடம் ரமீஸ் ஆகியோரை பதவி நீக்கம் செய்து ஜனாதிபதி மாளிகை உத்தரவிட்டது.

மாலத்தீவு சட்டப்படி மாந்திரீகம் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவர்களுக்கு 5 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி மீது மாந்திரீகம் செய்ததாக பெண் அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாலத்தீவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web