ஸ்ரீநகரில் பரபரப்பு... ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!

 
ஸ்பைஸ் ஜெட்
 

ஜம்மு - காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், டெல்லியில் இருந்து சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று   4 குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உள்பட 205 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

ஸ்பைஸ் ஜெட் விமான சேவை

இதனைத் தொடர்ந்து, மாலை 3.27 மணியளவில் அந்த விமானம் அழுத்த பிரச்னையின் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்பைஸ் ஜெட்

இது குறித்து, வெளியான அறிக்கையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், யாரும் மருத்துவ உதவிகளைக் கோரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?