தென்காசியில் பரபரப்பு... 100 சவரன் நகைகள், ரூ.20 லட்சம் பணம் கொள்ளை!

 
நகை கொள்ளை

தமிழகத்தில் சமீப காலங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உறவினரின் திருமணத்துக்கு சென்றதை நோட்டமிட்டு கைவரிசை காட்டினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

ராஜசேகர், சென்னையில் தொழில் செய்து வருவதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரியின் நிர்வாகத்தை அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன்கள் கவனித்து வருகின்றனர். இவர்களது வீடு, பள்ளிக்கூட வளாகத்திலேயே பின்பகுதியில் உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் நேற்று காலையில் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், துணிகள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோக்களில் இருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் நைசாக மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் பீரோக்களை உடைத்து திறந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

750 சவரன் கொள்ளை!! பூட்டிய வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்!!

கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், ராஜேஸ்வரியின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே பள்ளி உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது