ரயில் நிலையத்தில் பதற்றம்.. ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் புகுந்து கொடூர தாக்குதல் !

 
கஞ்சா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் என்ற இளைஞரை ஒரு கும்பல் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் விரட்டியுள்ளது. மேலும் திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு சென்ற இர்ஃபானை, அங்குவைத்து அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

விசாரணையில் தாக்குதல் நடத்தியது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது அடியாட்டிகள் என்பவர் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் மூர்த்தியை பிடித்த அரக்கோணம் ரயில்வே போலீசார், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தின் உள்ளே வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இர்ஃபான் உறவினர்கள், நண்பர்களும் அங்கு வந்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர்கள், இர்ஃபான் மீது தாக்குதல் நடத்த என்ன துணிச்சல் எனக்கூறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கஞ்சா

இவ்வாறு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் நடந்த இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மூர்த்தி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் இர்ஃபானை கொலை செய்ய முயற்சி செய்த மூர்த்தியை போலிசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், மூர்த்தியை ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக இர்ஃபானின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து பேரும் தலைமறைவாகினர். இதில் இருவர் சிக்கினர். மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். 

கஞ்சா

ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவ்வாறு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web