இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் எதிரொலி... கச்சா எண்ணெய் விலை உயர்கிறது! உலக தலைவர்கள் யாருக்கு ஆதரவு?!
உலக நாடுகளை இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றமடைய செய்துள்ள நிலையில், இந்த போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்தது” என்று தெரிவித்தார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ், “மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் சீர்குலைக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். 24 மணி நேர உதவி எண்களை 972-547520711, 972-543278392 தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்தது. இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ஈரான் ஏவுகணை தாக்குதலை துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகின்றன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
