பயங்கரம்!! காரும் , லாரியும் நேருக்கு நேர் மோதல்!! உடல் நசுங்கி 6 பேர் பலி!!

 
கார் விபத்து

கர்நாடகமாநிலம் கொப்பல் மாவட்டம், குஸ்டகி தாலுகாவில்  கலகேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிவிரைவாக  கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதே சாலையில் லாரி ஒன்றும் எதிர் திசையில்  வந்து கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதிவேகத்தில் எதிரே வந்த லாரியின் மீது மோதி கோர விபத்துள்ளனாது. லாரியின் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் கார் முழுவதுமாக மாட்டிக்கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.இந்த பயங்கர விபத்தில் ஏற்பட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கார் விபத்து

காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். மீட்பு பணிகளில்  காருக்குள் இருந்த அனைவரும் உடல் நசுங்கி உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை  உயிரிழந்தவர்களின் உடல்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜப்பா பனகோடி, ராகவேந்திரா, அக்ஷயா சிவசரண், ஜெயஸ்ரீ, ராக்கி மற்றும் ராஷ்மிகா ஆகியோர் எனவும் இதில் இருவர் குழந்தைகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உயிரிழந்தவர்கள் வாடகை காரில் விஜயப்புராவில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர் .கார் விஜயபுராவில் இருந்து பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது மற்றும் லாரி தமிழகத்தில்  இருந்து குஜராத் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது எனவும்  தெரியவந்துள்ளது. அப்போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சித்தாராமையா

கொப்பல் மாவட்டம் குஸ்டகி அருகே கலகேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடிக்காமல் கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அதன் எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியதும் இதனால், காரில் இருந்த 6  பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பயங்கர விபத்தில் உயிரிழந்த 6  பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web