சாலையின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து.... 20 பேர் படுகாயம்!

 
ஆம்னிபேருந்து விபத்து

 
 

நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து  30 பயணிகளுடன் சென்னையை நோக்கிவ் வந்து கொண்டிருந்தது. குமார் என்பவர் இந்த பேருந்தை  ஓட்டிக் கொண்டு வந்தார். ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை  ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் வந்து கொண்டிருந்தது.  

ஆம்னிபேருந்து விபத்து

பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில்  அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால்  சர்வீஸ் சாலையில் சென்ற பேருந்து சாலையின் தடுப்பு கட்டையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அவ்வழியாக சென்றவர்கள்  இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

ஆம்னிபேருந்து விபத்து
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த் வந்த காவல்துறை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணிகள் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த  விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web