லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்!

 
கயல்விழி

கோவையில் இருந்து தேனி நோக்கி அதிகாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்தை சௌந்தர்ராஜ பெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் நடத்துநர் வேல்முருகன் மற்றும் 44 பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, தெத்துப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. 

கயல்விழி

அதேவேகத்தில் நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த பெயிண்டர் ஐயப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோவையில் இருந்து கேரளா சென்ற மகாலட்சுமி (23), ஸ்வேதா (24), ரேவதி (23), மகேஸ்வரி (23), உத்தமபாளையம் கார்த்திகேயன் (20), கோவை கணவாய் சேர்ந்த முருகேஸ்வரி (32), விசாலினி (14) கயல்விழி (12) , மற்றும் டிரைவர் சௌந்தர்ராஜ பெருமாள் (38), கண்டக்டர் வேல்முருகன் (35) உள்ளிட்ட 16க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.   

கயல்விழி

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் யவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web