7 வது மாடியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை புறநகர் மாவட்டம் தஹிசார் கிழக்கு சாந்தி நகர் பகுதியில் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இன்று மாலை 3 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
