பயங்கர நிலச்சரிவு... 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... பப்புவா நியூ கினியாவில் கதறும் மக்கள்!
Report:
— Reporter Today News Channel (@reportertoday88) May 24, 2024
The massive landslide in Mulutaka, Enga province Papua New Guinea yesterday night. It covered many people and Will be identified after a month.
Reporter: Nehemiah Walyo pic.twitter.com/jAMLQtjleh
தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோ மீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள 'என்க' (Enga) மாகாணம்.இங்குள்ள காகலம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். நிலச்சரிவில் புதையுண்டு இறந்தவர்களின் உடல்களை உள்ளூர்வாசிகள் வெளியே எடுப்பது சமூக வலைதளங்களில் வீடியோக்களில் வெளியாகி மனதை உலுக்கியெடுக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
