அதிகாலையில் பயங்கரம்.. மர பட்டறையில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்!

 
மர பட்டறை

சிவகங்கையில் உள்ள நவீன மர இழைப்பு பட்டறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், தேக்கு மரங்கள் எரிந்து நாசமானது. சிவகங்கை குண்டுரணி அருகே குடியிருப்பு பகுதியில் நவீன மரப்பட்டறை நடத்தி வருபவர் சதீஷ்குமார். இந்த பணிமனையில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேர்த்தியான மர வேலைப்பாடுகளை வடிவமைப்பதில் புகழ்பெற்ற இந்தப் பட்டறையில், மர வேலைகளைச் செய்வதற்கான புதிய வகை நவீன இயந்திரங்களும் இருந்தன.

இந்நிலையில் இந்த பட்டறையில் இன்று (ஜூலை 14) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு வேகமாக பரவியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். ஆனால், பட்டறை எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் பல லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு தொழில் போட்டி காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மரப்பட்டறையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!