திருச்சியில் பயங்கரம்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!

 
குதிரை

திருச்சி மாவட்டம் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் டாக்கர்ஸ் சாலை பகுதியில் சண்முகம் (28) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் குதிரை ரேஸ் வண்டியை வைத்து பந்தயத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சண்முகம் பஞ்சவர்ண சுவாமி கோயில் மார்கெட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். 

அப்போது திடீரென அங்குவந்த நான்கு பேர் கொண்ட கும்பல், சண்முகத்தை வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல், தாங்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றனர். அதனைத்தொடர்ந்து சண்முகம் அங்கிருந்து தப்பியோடி அருகில் இருந்த டீக்கடைக்குள் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.

எனினும் விடாமல் விரட்டிய அந்த கும்பல், சண்முகத்தை ஓட ஓட விரட்டிச் சென்று டீக்கடையில் வைத்து வெட்டிக் கொலை செய்தனர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப்பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியில் அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.

குதிரை

பின்னர் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை தீவிரப்படுத்தினர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். குதிரை ரேஸ் பந்தயத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணையில் வெளியான தகவலின்படி, சண்முகம் 3 குதிரைகளை வைத்து குதிரை வண்டி ஓட்டி வந்துள்ளார். குதிரை ரேஸ் சம்பந்தமான வீடியோக்களை பதிவேற்றும் வகையில் சண்முகம் யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்தவகையில், சமீபத்தில் திருவெறும்பூர் அருகே குதிரை ரேஸின் போது சண்முகத்திற்கும் சிலருக்கும் இடையே பிரச்னை நடந்திருக்கிறது. அந்தப் பகையின் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

குதிரை

சம்பவ இடத்தில் இருந்த 3 சிசிடிவி கேமராக்களும் செயல்படாத நிலையில் இருந்துள்ளன. சம்பவ இடத்திற்கு அருகே வேறு ஏதாவது சிசிடிவி கேமராக்களில் கொலையாளிகள் முகம் பதிந்திருக்கிறதா என கண்டறிந்து வருவதாகவும், கொலையாளிகள் கைதுக்கு பிறகுதான் உறுதியான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் கூறுகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web