’இந்தியா, பாகிஸ்தான்’ போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்... ரசிகர்கள் அதிர்ச்சி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 9ம் தேதி இந்தியா பாகிஸ்தான் போட்டி நியூயார்க்கில் நடைபெறும் நிலையில் இதற்காக தனி மைதானம் உருவாக்கப்பட்டு இருக் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ16 லட்சம் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தனை ஸ்பெஷல் ஏற்பாடுகளும், தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பிற்கும் ஏற்பாடுகள் பக்காவாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று அச்சுறுத்தல் வெளியாகி உள்ளது. மேலும் இது கூட்டமாக இல்லாமல் தனி நபர் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் பொதுவாக தனிநபர் கூட்டமாக இருக்கும் பகுதியில் சென்று கத்தியால் குத்தி கொலை செய்வார். அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என போலீசார் கைது செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் தான் இம்முறை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஐசிசி “ இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அல்லாமல் நியூயார்க்கில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்குமே தீவிர விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார்? கூடுதலாக 100 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். போட்டியை நேரில் காண வரும் ஒவ்வொரு ரசிகரையும் சோதித்த பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது. மைதானத்தை மட்டுமல்லாமல் மைதானத்தை சுற்றியும், வாகனங்கள் நிறுத்தும் இடம் என ஒவ்வொரு பகுதிக்கும் தனி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்த அமெரிக்க அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை ஐசிசி தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
