ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; 72 மணி நேரத்தில் 3வது தாக்குதல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவம் மற்றும் காவல்துறை கூட்டுச் சோதனைச் சாவடியில் கடந்த 72 மணி நேரத்தில் இது போன்ற மூன்றாவது சம்பவமாக நேற்று நள்ளிரவு பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர்.சத்தர்கல பகுதியில் உள்ள தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் டோடா மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த துப்பாக்கி சூட்டில் வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
#WATCH | Jammu and Kashmir: Follow-up search operation underway after the terror attack in Kathua's Hiranagar last night.
— ANI (@ANI) June 12, 2024
Out of two terrorists, one was neutralised last night in an encounter. Search operations to nab the other terrorists are underway. The security forces have… pic.twitter.com/uMD7CfRKWD
இருப்பினும், காஷ்மீர் புலிகள் என்ற உள்ளூர் குழு, தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் பல இந்திய பாதுகாப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று சம்பவங்கள் குறித்து ஜம்மு காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்த் ஜெயின் பேசுகையில், "நமது நாட்டில் உள்ள அமைதியான சூழலை எப்போதும் கெடுக்க முயற்சிப்பது நமது விரோதமான அண்டை நாடு தான். இது (ஹிராநகர் தீவிரவாத தாக்குதல்) ஒரு புதிய ஊடுருவலாகத் தெரிகிறது. ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவனை தேடும் பணியும் நடந்து வருகிறது.
#WATCH | Doda, J&K: Injured being brought to the Sub District Hospital Bhaderwah as an encounter is underway between security forces and terrorists in the Chattargala area of Doda. pic.twitter.com/BxXaus49Qd
— ANI (@ANI) June 11, 2024
நேற்று இரவு கதுவாவின் ஹிராநகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாதுகாப்புப் படைகள் பின்தொடர்தல் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன, அங்கு இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்ற தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். கதுவாவில் மறைந்துள்ள மற்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினரும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளுக்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
