4வது நாளாக தொடரும் சோதனை!! பவரை இழக்கப்போகும் பவர் மினிஸ்டர்!!

 
வருமான வரி சோதனை


பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்த 26ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வந்து முகாமிட்ட வருமானவரித்துறை அதி கள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் நண்பர்கள் ஆகியோரில் வீடுகள், சோதனை நடத்த சென்றனர் அவர்களை தடுத்து நிறுத்திய திமுக,வினர் சோதனை நடத்த விடாமல் திருப்பி அனுப்பியதோடு பெண் அதிகாரியையும்  தாக்கினர். அதிகாரிகளின் வந்த கார் கண்ணாடி சைட் மிரர் உடைக்கப்பட்டது.அதிகாரிகள் தாக்கியதாக திமுக தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி

திமுகவினர் தாங்கியதாக 4 அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் காயத்ரி மட்டும் சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கிறார் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மனை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து இன்றும் நான்காவது நாளாக மத்திய ரிசர்வ் போலீசார்கள் கரூருக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் பாது சாரின் ஒத்துழைப்போடு மேலும் பல இடங்களிலும் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கருப்பாய்கோயில் தெருவில் வசிக்கும் திமுக தொண்டர் குமார் தன்னை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக மருதுவமனையில் சேர்ந்துள்ளநிலையில், நேற்று காலை 11 மணிக்கு மேல் அவரது வீட்டிற்கு கார்களில் வந்த 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தன் பெயரில் எந்த சொத்தும் வாங்கவில்லை எனது சசோதரரின் மனைவிக்கு  அவரது அம்மா அளித்த சொத்துதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என செந்தில் பாலாஜி கூறிய நிலையில் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள்10க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனையில் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த வீட்டை அமைச்சர் செந்தில்பாலாஜி பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி வருவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனை
சென்னை வருமான வரித்துறை விசரணை பிரிவு இயக்குனர் சிவசங்கரன் பர்களிடம் கூறும்போது, அதிகாரிகள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் 2 அதிகாரிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பல வழக் குகன் பதிவு செய்ப உள்ளோம். யார் யார் இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்களை என்பதை காட்சியின் அடிப்படையில் சாட்சிகளை அளித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்துவோம்" என்றார்.தற்பொழுது வரை திமுகவைச்சேர்ந்த அருண் (40). திமுக இளைஞர் அணி கரூர் வடக்கு மாநகர துணை செயலாளர் ரூபேஷ் திமுக ஐடி விங் பிரமுகர் ஒருவர் மற்றும் ஆறுமுகம் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட 8பேரை போலீார் கைது செய்துள்ளனர்.


இதற்கிடையில் நேற்று மாநகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் லாரன்ஸ் 16வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் உட்பட மேலும் 13 நபர்களை கைது செய்துள்ளனர், கரூர் மாவட்டத்தையே கையில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்கின்றனர் உடன்பிறப்புக்கள் ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை மாற்ற வேண்டும் இல்லையேல் இனி எங்களால் சுதந்திரமாக பணி செய்ய முடியாது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் கதையாகிவிடும் என டெல்லிக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனராம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web