அடி தூள்... தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி... 15 மாட்டு வண்டிகளில் சடங்கு சீர் கொண்டு சென்ற தாய்மாமன்!
திண்டுக்கல்லில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கிழக்குச் சீமையிலே பட பாணியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் வியந்து பார்த்து ரசித்தனர்.ஒரு பெண்ணுக்கு தாய்மாமன் சீர் கொடுக்கும் பழக்கம் தமிழர்களின் கலாசாரத்தில் உள்ளது. குறிப்பாக காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு தாய் மாமன்கள் போட்டி போட்டு சீர் எடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இதனை அவர்கள் கவுரவமாகவும் கருதுவர்.
அந்த வகையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில், பெண்ணின் தாய்மாமன்கள் 12 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து அசத்திய நிகழ்வு வைரலாகியுள்ளது. இதை அப்பகுதியில் பொதுமக்கள் கண்டு வியந்து ரசித்தனர்.

திண்டுக்கல் முருக பவனத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் இரண்டாவது மகள் ரம்யாவின் பூப்புனித நீராட்டு விழா, அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஜெயபால் மனைவியின் உடன் பிறந்த சகோதரர்கள், பழனி ரோட்டில் உள்ள லாரி செட் அருகில் இருந்து தாய்மாமன் சீராக 12 மாட்டு வண்டிகளில் கொண்டுவந்தனர்.
தாம்பாள தட்டில் தேங்காய், கருப்பட்டி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், பேரிச்சம்பழம், பூக்கள், பட்டு புடவைகள், வண்ண சுவை உடைய இனிப்பு வகை பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள் என தட்டுக்களுடன் வாண வேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

இதற்கு மேலாக தாய்மாமன் சீராக ஆடுகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருள்களை மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலம் ஆக வாண வேடிக்கையுடன் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். தாய்மாமன் சீர்வரிசை கொண்டு சென்றதை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும் வியந்து பார்த்து ரசித்தனர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் கொண்டது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!
