தைப்பூச இருமுடி விழா... மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிக நிறுத்தம்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 2 வரை குறிப்பிட்ட நாட்களில், மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் மொத்தம் *57 எக்ஸ்பிரஸ் ரயில்கள்* தற்காலிகமாக இங்கு நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தைப்பூசை தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் மாநிலம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு பெரும் வசதி கிடைக்கிறது.

இந்த தற்காலிக நிறுத்தப் பட்டியலில் உள்ள ரயில்களில் மும்பை–காரைக்கால் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன், திருக்குறள், சம்பர்கிராந்தி, மலையக்கோட்டை, பொதிகை, நாகர்கோவில் அதிவிரைவு, கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்–இராமேஸ்வரம், கம்பன் எக்ஸ்பிரஸ், மண்ணை எக்ஸ்பிரஸ், தமிழ் சங்கமம், உழவன் எக்ஸ்பிரஸ், ஹம்சாபர் சேவைகள், சிலம்பு எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் சேவைகள் மற்றும் பல நீண்ட தூர ரயில்கள் அடங்கும்.
மேலும், புவனேஸ்வர்–இராமேஸ்வரம், புதுச்சேரி அதிவிரைவு, லோக்மான்ய திலக் டெர்மினஸ்–மதுரை விரைவு, பனாரஸ்–இராமேஸ்வரம், அயோத்தியா–இராமேஸ்வரம் அதிவிரைவு, அனுவ்ரத் ஏசி எக்ஸ்பிரஸ், மஹால் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர்–மன்னார்குடி அதிவிரைவு, அந்தியோதயா போன்ற முக்கிய ரயில்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்கள் இரு திசைகளிலும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு விரைவில் IRCTC இணையதளத்தில் துவங்கும். பக்தர்கள் புதிய நிறுத்த ஏற்பாட்டினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தைப்பூசை நோக்கி பக்தர் கூட்டம் பெருகும் நிலையில், ரயில்வே மேற்கொண்ட இந்த கூடுதல் வசதி மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
