‘தளபதி 68’.. வெங்கட் பிரபுவை கலாய்க்கும் வைரல் மீம் வீடியோ!

 
வெங்கட்பிரபு தளபதி 68 விஜய்

திரைத்துறையைப் பொறுத்த வரையில் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், காமெடி நடிகர்கள் என்று ஆளாளுக்கு ஒரு துறையைச் சொல்வார்கள். கேப்டன் ஆஃப் த ஷிப் இயக்குநர் தான் என்று பெருமை பேசலாம். ஆனா, அந்த கேப்டனை கப்பல் ஓட்ட விடுவதும், தலைக்குப்புற தள்ளுவதும் ரசிகர்கள் கைகளில் தான் இருக்கு.

இப்படித்தான் ஒருத்தரு, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டியிருக்கேன்னு வாய் வார்த்தை விட, கொஞ்ச நாள் அதிகமா ஓடியிருக்க வேண்டிய படத்தை ரிலீசான அன்னைக்கே தியேட்டைரை விட்டு ஓட வெச்சாங்க ரசிகர்கள்.


இப்போ எதுக்கு இந்த பில்டப் என்கிறீர்களா? விஷயம் இருக்கு. சமயங்களில் ரசிகர்கள் செய்கிற போஸ்டர் டிசைன், மீம்ஸ் எல்லாம் ஒரு படத்தை விட அதிகளவு கற்பனையோடவும், ரசிக்கிற மாதிரியும் இருக்கும். அப்படித்தான் இப்போது தளபதி 68 படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவைக் கலாய்த்து ஒரு மீம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Thalapathy 86

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நேரத்தில், அடுத்ததாக, ‘தளபதி 68’  படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.  ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படம் என்பதால், படத்தின் பட்ஜெட்டும், தரமும் அதிகரித்துள்ளது. 

பகவதி படத்தில் விஜய்யின் டீக்கடையில் வேலை செய்யும் வடிவேலு, தன் ஊர்க்காரரான சிங்கமுத்துவை பார்த்ததும் டீ குடிக்க அழைப்பார். அப்போது சிங்கமுத்து தனது ஒட்டுமொத்த ஊர்க்காரர்களையும் கூப்பிட, விஜய், சிங்கிள் டீ கேட்ட, அலோ பண்ணேன். இப்போ ஊரே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கு என காண்டாவார். இதனை வடிவேலு ஏஜிஎஸ் எனவும், வெங்கட் பிரபுவவை சிங்கமுத்து எனவும் மாற்றி வீடியோ மீம் உருவாக்கியுள்ளனர். வெங்கட் பிரபு அழைக்க, பிரேம்ஜி, வைபவ், மஹத், சிவா, ஜெய் என அவரது பட நடிகர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web