விக்ரமின் மிரட்டலான நடிப்பில் ‘தங்கலான்’ ட்ரெயிலர்!

 
தங்கலான்

 தமிழ் திரையுலகில் தனக்கென தனிப்பாணி அமைத்து வித்தியாசமான கதைக்களங்களில் முத்திரை பதித்து  வருகிறார் நடிகர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வரும் நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தங்கலான் திரைப்படம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற உண்மைகதையின் அடிப்படையில் உருவாகி  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ஆங்கிலேயர் ஆட்சியில்  தங்கச் சுரங்கம் அமைக்க  பழங்குடியினரின் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டனர்.  அவர்களை எதிர்த்து போராடிய பழங்குடியினத் தலைவர் தங்கலானின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றிய படம் தான் தங்கலான் கதை  என சொல்லப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில்  மிரட்டலான இசையில் உருவாகியுள்ளது.  ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்சின் கீழ் கே. இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான படம் இது.

தங்கலான்

இந்த திரைப்படத்தில்  விக்ரம் மற்றும் பசுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சியான் 61 என்ற தற்காலிகத் தலைப்புடன் டிசம்பர் 2021ல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு  அக்டோபர் 2022 ல் தான் தங்கலான் என படத்தின் பெயர் வெளியானது. இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் ட்ரெயிலர்  நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web