ரஜினிகாந்த்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி... சீமான் ட்வீட்...ட்டு!

 
சீமான் ரஜினிகாந்த்

 இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் நாதக   மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி  அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  2016 முதல் நாம் தமிழர் கட்சி  அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்று வருகிறது.  குறிப்பாக  அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் தனித்தே போட்டியிட்டுள்ளது.  8 ஆண்டுகள் கடந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்துள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் என்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் என சீமான் பெருமையாக கூறியிருந்தார்.சமீபத்தில்  இது குறித்து ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார். சீமான் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ மக்களவைத்  தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..!” என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web