அந்த மனசு தான் சார் கடவுள்.. சிம்பு பட நடிகைக்கு குவியும் பாராட்டு!

 
சித்தி இத்னானி

நடிகர் சிம்புவின்’வெந்த தணிந்தது காடு’ படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சித்தி இத்னானிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. வேற லெவலில் சிந்தனை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.  பிறந்த நாள் நிகழ்ச்சின்னா நாலு பேருக்கு சோறு போடுகிற மாதிரி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது, அனாதை ஆசிரமங்களுக்கு நாலு காசு உதவி செய்யுறதுன்னு  நிறைய பேர் திரிகிற இந்த காலத்துல, பணம் தர்றது எல்லாராலும் முடியும். ஆனா, உறவுகளை இழந்து நிற்கிற அவங்களுக்கு தேவை அன்பும் ஆதரவும் தான்.

அவங்களோட நேரம் செலவிடறது தான் முக்கியமான, சிறந்த பரிசாக இருக்க முடியும் என்று கூறும் சித்தி இத்னானொ, மும்பையில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் பள்ளிக்குச் சென்று, அவங்களோட நேரம் செலவிட்டு, அவங்களோட கல்விக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி இருக்கிறார். 

குஜராத் திரையுலகில் 2016ல் ‘கிராண்ட் ஹாலி’ படத்தின் மூலமாக அறிமுகமான சித்தி இத்னானி., சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ மூலம் தமிழில் அறிமுகமாகனார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பரவலாக பேர் பெற்ற சித்தி இத்னானி, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 


இந்தியில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திலும் முதன்மையான கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்துள்ளார். 

இந்நிலையில், நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது ஆதரவற்றோர்களை சந்தித்து உதவி வழங்கி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் மனநலம் குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.

சித்தி இத்னானி

தனது ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சித்தி இத்னானி, “நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம் உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் எனது மதியத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு 'என்ன மனசுப்பா' என்று ரசிகர்கள் வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web