கல்யாணம் ஆகலை... கருவை கலைத்த தோழியை சுட்டுக் கொன்ற காதலன்.. அதிர்ச்சி சம்பவம்!

 
கேப்ரியல்லா கொன்சாலஸ்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஹரால்டு தாம்சன். 22 வயதான இவர் தன்னை விட 4 வயது மூத்தவரான கேப்ரியல்லா கொன்சாலஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்களான இவர்கள் பல நேரங்களில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால் காதலி கேப்ரியல்லா கர்பமடைந்துள்ளார். திருமணம் முடிவதற்கு முன்பு, குழந்தையை பெற்றுக்கொள்ள கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை. கருவை கலைத்துவிடலாம் என காதலனிடம் கூறிவந்துள்ளார். ஆனால், காதலன் ஹரால்டு கருவை கலைக்க உடன்பாடு இல்லாததால் தடுத்து வந்துள்ளார். 

கேப்ரியல்லா கொன்சாலஸ்

இப்படியே, சில வாரங்கள் கடந்த நிலையில் கரு ஏற்பட்டு ஆறு வாரங்களை தாண்டியுள்ளது. இதற்குமேல் வழியில்லை எனக்கூறி, தனது காதலனுக்கு தெரியாமல் கருவை கேப்ரியல்லா கலைத்துவிட்டார். இவர்கள் வசிக்கும் டெக்சாஸ் மாகணத்தில் ஆறு வாரம் தாண்டிய கருவை கலைப்பது சட்டவிரோதமாகும். எனவே, அங்கிருந்து 800 தாண்டியுள்ள கொலாரேடோ மாகாணத்திற்கு சென்று கருவை கலைத்துள்ளார் கேப்ரியல்லா.

அதன்பின்னர் கேப்ரியல்லா ஊருக்கு திரும்பிய நிலையில், காதலன் ஹரால்டுடன் மாலுக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். காரில் அவர்கள் சென்றுகொண்டிருந்த போது தான் தான் கருவை கலைத்த விஷயத்தை கேப்ரியல்லா சொல்லியுள்ளார். இதைகேட்டு ஆத்திரம் அடைந்த ஹரால்டு, ஷாப்பிங் மாலில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு ஓட்டி சென்றார்.

கேப்ரியல்லா கொன்சாலஸ்

அங்கு வைத்து காதலி கேப்ரியல்லா கழுத்தை நெரித்தும், பின்னர் தனது துப்பாக்கியால் சுட்டும் காதலியை ஹரால்டு கொலை செய்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சிசிடிவி காட்சி ஆதாரங்களின் படி காதலன் ஹரால்டு மீது கொலை வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web