தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம் ஊர், தேதிகள் ... முழு தகவல்கள்!

 
விஜய்
 

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சார வியூகத்தை திட்டமிட்டு அதன்படி செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13ம் தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

விஜய்

இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்துள்ளார். ஆனால், விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.  இதையடுத்து விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி 

 
1 செப்டம்பர் 13  சனிக்கிழமை : திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
2 செப்டம்பர் 20  சனிக்கிழமை  : நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை 
3 செப்டம்பர் 27  சனிக்கிழமை : திருவள்ளூர், வட சென்னை 
4  அக்டோபர் 4 சனிக்கிழமை : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு 
5  அக்டோபர் 5  ஞாயிற்றுக்கிழமை : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

விஜய்  ஜனநாயகன்

6  அக்டோபர் 11 சனிக்கிழமை : குமரி, நெல்லை, தூத்துக்குடி 
7  அக்டோபர் 18  சனிக்கிழமை  : காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை 
8  அக்டோபர் 25  சனிக்கிழமை : தென் சென்னை, செங்கல்பட்டு 
9  நவம்பர் 1    சனிக்கிழமை : கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் 
10 நவம்பர் 8  சனிக்கிழமை : திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் 
11 நவம்பர் 15   சனிக்கிழமை : தென்காசி, விருதுநகர் 
12 நவம்பர் 22   சனிக்கிழமை :  கடலுர் 
13 நவம்பர் 29  சனிக்கிழமை : சிவகங்கை, ராமநாதபுரம் 
14 டிசம்பர்  6 சனிக்கிழமை: தஞ்சாவூர், புதுக்கோட்டை 
15 டிசம்பர் 13 சனிக்கிழமை :சேலம், நாமக்கல், கரூர் 
16 டிசம்பர் 20 சனிக்கிழமை:  திண்டுக்கல், தேனி, மதுரை

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?